• Jan 18 2025

விஜய் அரசியல் வந்தது பிரயோஜனம் இல்லை! பொங்கிய தலைவர் அண்ணன்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் தனது இறுதி திரைப்படத்தின் பின்னர் முழுமையாக அறத்தியலில் இறங்க போகிறேன் என்று முன்னரே கூறியிருந்தார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் ஆரம்பித்து மாபெரும் மடம் சிறப்பாக நடத்தி முடித்தார். 


இப்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறார். கடந்த மாதம் அவர் நடத்திய மாநாடு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு பெற்றதோடு மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. இவரை ஓரங்கட்ட வேண்டும் என்பதற்காகவே சில அரசியல் கட்சிகள் தேடி தேடி குறைகளை சொல்லி வருகின்றன.

d_i_a

இது ஒரு புறம் இருக்க விஜய்க்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்த சூழலில் ரஜினி மட்டும் வாழ்த்தவில்லை என்ற கேள்வி இருந்தது. அந்தக் குறையும் தற்போது தீர்ந்து விட்டது. சூப்பர் ஸ்டார் விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டார்.  ஆனால் அவருடைய அண்ணன் சத்யநாராயண ராவ் விஜய்யால் அரசியலில் சாதிக்க முடியாது என பேட்டி கொடுத்துள்ளார்.


"விஜய் அரசியலுக்கு வந்து எந்த பிரயோஜனமும் இல்லை. அவரால் சாதிக்க முடியாது. முயற்சி செய்யட்டும் என தெரிவித்துள்ளார். இது தளபதி ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இப்போது விஜய்யின் அரசியலைப் பற்றி அவர் பேசி இருப்பது முழு வன்மம் தான் என விஜய் ரசிகர்கள் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement