பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபி தனது நண்பர் மற்றும் ரெஸ்டாரன்ட் செப்புடன் இருந்து பாக்கியாவை எப்படி நடுத் தெருவுக்கு கொண்டு வரலாம் என திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். அதன்படி ஸ்வீட் ஓடர் எடுத்த பாக்கியா இம்முறை தனக்கு நெருங்கிய வட்டாரத்தில் தான் எடுத்துள்ளார். அது அத்தனையும் தவிடு பொடியாக வேண்டும். எல்லாரும் அவரை காரி துப்ப வேண்டும் என திட்டம் போட்டுக் கொண்டு உள்ளார்.
இதைக் கேட்ட கோபியின் நண்பர் நீ வர வர நம்பியார் போல ஆகிறாய் என்று சொல்ல, பாக்யா விஷயத்தை நான் ரொம்ப கெட்டவன் தான். நான் ஆசைப்பட்ட ராதிகாவுடன் என்னை நிம்மதியாக வாழ விடவில்லை. அதனால் அவளை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விடுவேன் என்று சொல்லுகின்றார்.
d_i_a
இதை தொடர்ந்து எழிலின் பட பூஜைக்காக எல்லாரும் தயாராக, ஈஸ்வரியை பாக்கியா கூப்பிடுகின்றார். ஆனாலும் தான் வரவில்லை என பிடிவாதம் பிடிக்கின்றார். தான் ரெஸ்டாரண்டுக்கு போயிட்டு வருகின்றேன் நீங்கள் முன்னுக்கு போங்கள் என வீட்டார்களை அனுப்பி வைக்கின்றார்.
இதை அடுத்து ப்ரொடியூசரை சந்தித்த கோபி, எழிலுக்கு விஷயத்தை சொல்லியாச்சா என்று கேட்கின்றார். ஆனாலும் தான் நேரம் பார்த்து சொல்வதாக ப்ரொடியூசர் சொல்லுகின்றார் . அதன் பின்பு எழிலின் பங்க்ஷனுக்கு வீட்டார்கள் வர , கோபியும் கையில் பொக்கே உடன் வருகின்றார். ஆனாலும் அவரை பார்த்து எழில் டென்ஷன் ஆகின்றார்.
இன்னொரு பக்கம் எழிலுக்கு படத்தின் ப்ரொடியூசர் அட்வான்ஸ் கொடுக்கின்றார். இதனால் சந்தோஷப்பட்ட எழில் அக்ரிமெண்டில் சைன் பண்ணி கொடுக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!