• Apr 15 2026

விஜயா குடும்பத்துக்கு அடித்த ஜாக்பாட்.. அண்ணாமலைக்கு எழுந்த சந்தேகம்? டுடே எபிசோட்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜ் தன்னுடைய எங்கேஜ்மென்ட் மோதிரத்தை காணவில்லை என்று சொன்னதும் வீட்டில் உள்ள எல்லோரும் தேடுகிறார்கள். ஆனால் முத்து, நீ காலையிலிருந்து என்ன என்ன செய்தாய் என்பதை ஒவ்வொன்றாக சொல் எனக் கேட்கின்றார்.

இதன் போது மனோஜ் தன்னுடைய பாக்கெட்டில் தான் எங்கேஜ்மென்ட் மோதிரத்தை வைத்ததை ஞாபகப்படுத்தி எடுக்கின்றார். அதற்கு பின்பு பெண் வீட்டில் இருந்து வந்து எங்கேஜ்மென்ட் நல்லபடியாக நடந்து முடிந்தது.


இதன்போது மனோஜை எங்கேஜ்மென்ட் செய்தவர், விஜயா முத்து மற்றும் மீனாவுக்கு பாஸ்போர்ட் எடுக்குமாறும், அமெரிக்காவை வந்து சுற்றி பார்க்க வேண்டும் எல்லோரும் வரவேண்டும் என்றும் சொல்லுகின்றார். இதனால் விஜயா மகிழ்ச்சியின் உச்சத்தில் காணப்படுகின்றார்.

அதற்கு பின்பு அவர்கள் போனதும் அண்ணாமலை மனோஜின் விவாகரத்து வழக்கு என்ன ஆனது என்று கேட்க, அது எல்லாம் முடிந்து விட்டது மனோஜும் ரோகிணியும் சேர்ந்து வாழ முடியாது என்று அவர்களே கூறி விட்டார்கள் என பொய் சொல்லுகின்றார் விஜயா. இதனை வீட்டில் உள்ள எல்லோரும் நம்பி விடுகின்றார்கள் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement