• Sep 14 2024

முத்து வச்ச சூனியத்தால் கோனையாகிய விஜயா வாய்? பயத்தின் உச்சியில் மனோஜ்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயா  அண்ணாமலையிடம் பேசிக்கொண்டு இருக்க அங்கு பட்டு, எலுமிச்சையுடன் வந்த முத்து வீட்டுக்குள்ள கெட்ட சக்தி இருக்குது என்று சொல்ல, எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றார்கள். மேலும் நகைய எடுத்தவங்களை கண்டுபிடிக்க சாமியார் ஒருத்தர பார்த்தேன்.அவர் எலுமிச்சை பழத்தை மந்திரிச்சி தந்து இருக்காரு. இதை பூஜை அறையில வச்சா 24 மணி நேரத்தில் அவங்களோட வாய்  கோணையாக்கி விடும் என்று சொல்ல, விஜயா, மனோஜ்  பதற்றம் அடைகின்றார்கள்.

பூஜை அறையில் முத்து பழத்தை கொண்டு போய் வைக்க விஜயா அதை தடுக்க, நீங்க எதுக்கு பயப்படுறீங்க என்று கேட்க, எனக்கு ஒன்னும் பயம் இல்லை என்று சொல்லுகிறார். மனோஜ் யாருக்காவது ஏதும் ஆகப்போகுது என்று சொல்ல, நகையை எடுத்தவர்களுக்கு மட்டும்தான் வாய் கோணையாகும் மற்ற யாருக்கும் எதுவும் நடக்காது என்று சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து விஜயா, மனோஜ் வாய் கோணையாகிவிட்டது போல தோன்றி பயந்து நடுங்க, ரோகினி இரண்டு பேருக்கும் ஒன்றும் ஆகல பயப்படாதீங்க என்று  கூல் பண்ணுகிறார்.


மறுபக்கம் எந்த சாமியாரை பார்த்தீங்க என மீனா முத்துவிடம் கேட்க, அவர் எலுமிச்சை பழ கதையை சொல்கின்றார். அப்ப பொய் சொன்னீங்களா என்று கேட்க, பொரி வைத்திருக்கேன். அவங்களா கண்டிப்பா வந்து மாட்டுவாங்க என்று தனது  திட்டத்தை சொல்லுகிறார் முத்து.

அதே போல ரவியும் ஸ்ருதியும் கேரளாவில் இந்த மாதிரி மந்திரிகம் எல்லாம் இருக்கு. அப்பா சொல்லிக் இருக்காரு என்று பேசிக்கொண்டே மீனாவை கூப்பிட்டு முத்து எந்த சாமியாரை பார்த்தாரு என்று கேட்க, மீனா முத்துவின் திட்டத்தை சொல்ல இதுவும் நல்ல ஐடியா தான் என்று சொல்கின்றார்கள்.

இறுதியாக மனோஜ்க்கு முத்து கொண்டு வந்த எலுமிச்சை பழம் கண்ணு முன்னாடி வந்து தூக்கம் வரவிடாமல் பயத்தில் தவிக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement