• Aug 24 2026

திடீரென சத்யாவை கொண்டாடும் விஜயா.. ரோகிணி எடுத்த விபரீத முடிவு..? பரபரப்பான எபிசோட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், வீட்டிற்கு வந்த முத்துவும் மீனாவும்  அண்ணாமலையிடம் சத்யா விஷயத்தை பற்றி கூறுகின்றனர். மேலும் சிந்தாமணியின் மகளை சத்யா காதலிப்பதாக சொன்னதும், விஜயா ஓடி வந்து உண்மையாகவே அவன் காதலிக்கிறானா என்று சந்தோஷப்படுகின்றார்.

மேலும், “நான் தீர்க்கதரிசி. ஏன் என்று தெரியுமா? சிந்தாமணி என்னை ஏமாற்றிய போது அவருடைய வீட்டிற்குச் சென்று அவருக்கு சாபம் விட்டு தான் வந்தேன். அப்போது இது எல்லாம் உன்னுடைய மகளுக்காக தானே செய்கிறா... அவர் ஒன்றும் இல்லாத வெறும் பயக்கூடத்தான் ஓடிப்போகிறார் என்று கூறினேன். அது இப்போது நடந்து விட்டது” என்று சந்தோஷப்படுகிறார்.

மேலும், எப்படியாவது சத்யாவுக்கு ரேகாவை கட்டி வைத்து விடுமாறு முத்துவிடம் சொல்லுகின்றார். இதனால் அண்ணாமலை கோபப்பட்டு விஜயாவுக்கு பேசுகின்றார்.

இன்னொரு பக்கம் ரோகினியை பார்க்க வித்யா வருகின்றார். இதன் போது, நீயும் என்னுடன் கதைக்கவில்லை, நான் தனியாக இருக்கின்றேன் என்று கூறி அழுகின்றார். மேலும், மனோஜ் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கூறி அழுது புலம்புகின்றார்.

இதன்போது, உன்னுடைய நல்லதுக்காக தான் சொல்லுகின்றேன், மனோஜ்க்கு டிவோர்ஸ் கொடுத்து விடு என்று வித்யா சொல்லுகின்றார். ரோகினியின் அம்மாவும் அதுதான் எனக்கும் நல்லது என்று தோன்றுகின்றது, கிரிஷ் ஆக மட்டும் வாழு என்று கூறுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட். 

Advertisement

Advertisement