• Jan 26 2026

விஜய் டிவிக்கு போட்டியான டாப் குக்கு டூப் குக்கு... வெளியானது புதிய அறிவிப்பு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு அதிகமாக உண்டு. அதில் பல பிரபல சமையல் கலைஞர்களும் பங்கு கொள்வதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. தற்போது இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோக்கள் தான் பிரபலமாக காணப்படும். அந்த அளவிற்கு விதவிதமாக புதிய புதிய நிகழ்ச்சிகளை யோசித்து களம் இறக்குவார்கள். அதிலும் இந்த சமையல் நிகழ்ச்சி சந்தோஷத்தை தரக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக காணப்படும்.


இதுவரை நான்கு சீசன்களில் தனது பங்களிப்பை செலுத்திய வெங்கடேஷ் பட்,  குக் வித் கோமாளி 5 சீசனில் பங்கு கொள்ளாமல் விலகி இருந்தார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியிருந்தது. அதன் பின்பு வெங்கடேஷ் பட் சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள சமையல் நிகழ்சியில் பங்கு கொள்வதாக வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தார்.


இந்த நிலையில், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சி எதிர்வரும் 19ஆம் தேதி ஆரம்பமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள்,  தகவல்கள் என்பன வைரல் ஆகி வருகின்றன.

Advertisement

Advertisement