• Mar 26 2026

பாலிவுட் வில்லன் நடிகர்களை தட்டித்தூக்கிய விஜய் சேதுபதி! கடந்தாண்டு அதிக சம்பளம் வாங்கிய பட்டியலில் முதலிடம்..!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்க எந்த மாதிரி கதாபாத்திரங்கள் வந்தாலும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் நடித்து கொடுத்து வருகிறார். இவர்  தமிழையும் தாண்டி பாலிவுட்டிலும் சில படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், 2023ம் ஆண்டில் வில்லனாக நடிப்பதற்கு அதிக சம்பளம் வாங்கிய நடிகராக விஜய் சேதுபதி காணப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு பாலிவுட் வில்லன் நடிகர்களை ஓவர்டேக் செய்து, வில்லன் கேரக்டருக்காக பல கோடிகளில் சம்பளம் வாங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.


அதன்படி, கடந்த ஆண்டு, ஷாருக்கானின் பதான் படத்தில் வில்லனாக நடித்த ஜான் ஆப்ரஹாம் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். 

லியோ படத்திற்காக சஞ்சய் தத்துக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் டைகர் 3 படத்தில் வில்லனாக நடித்த இம்ரான் ஹாஷ்மியும் 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். 

அதேபோல், அனிமல் படத்தில் வில்லனாக மிரட்டிய பாபி தியோல் கூட 4 கோடி ரூபாய் தான் சம்பளம் வாங்கியுள்ளாராம்.

இவ்வாறு, ஒட்டுமொத்த பாலிவுட் வில்லன்களையும் ஓரம்கட்டிய விஜய்  சேதுபதி, ஜவான் படத்திற்காக 21 கோடி ரூபா சம்பளம் வாங்கியுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

 

Advertisement

Advertisement