• Jan 19 2025

ஒரே டாபிக்கையே வச்சு ஓட்டும் விஜய் சேதுபதி..? புதுசா ஏதும் ட்ரை பண்ணுங்க ப்ரோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்புக்கும் பரபரப்பிற்கும் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி இதுவரை 8 சீசன்களை கொண்டு நகர்த்தி உள்ளது. முதல் ஏழு சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் வழங்கி வந்த நிலையில், எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்த சீசனின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள். ஒரு வீட்டை இரண்டாக பிரித்து ஆண்கள் அணி, பெண்கள் அணி என வகுத்துள்ளார்கள். ஆனால் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய போட்டியாளர்களுள் அதிகளவானோர் விஜய் டிவி பிரபலங்கள்தான் என குற்றச்சாட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் எந்தவித கண்டென்டும் கொடுக்கவில்லை என புதிதாக ஆறு பேர் களமிறக்கப்பட்டார்கள். ஆனால் இப்போது அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் காணப்படுவது ரசிகர்களை மேலும் வெறுப்புக்குள்ளாகியுள்ளது.

d_i_a

இந்த நிலையில், இன்றைய தினம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.


அதில் இவர்களுக்கு மொட்டைக் கடதாசி இருந்தா தான் பேசுவாங்க அப்படி என்று யாரை சொல்லுவீங்க என்று கேட்க ஜெஃப்ரி முதலில் சௌந்தர்யாவை சொல்லுகின்றார். அதன் பின்பு ஜாக்குலின் சிவாவை சொல்லுகின்றார்.

இதை அடுத்து சத்யா ஜெஃப்ரியை சொல்லுகின்றார். அதன்பின்பு இறுதியாக பவித்ராவுக்கு தைரியமே இல்லை அவங்களுக்கு மொட்டை கடதாசி தேவைப்படுது என சொல்லுகிறார்கள். 

எனினும் கடந்த இரண்டு நாட்களுமே விஜய் சேதுபதி மொட்டை கடதாசியை வைத்து மட்டும் பேசுவது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளமையும் குறிப்பித்தக்கது.

Advertisement

Advertisement