• Jul 03 2025

மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? விஜய் சேதுபதி விளக்கம் மற்றும் மன்னிப்பு..!

Roshika / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி, தனக்கு மட்டுமல்லாமல் தனது குடும்பத்திற்கும் திரையுலகத்தை விரிவாக்கி வருகிறார். அவரது மகன் சூர்யா தற்போது திரைப்படங்களில் நடிக்க தொடங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இந்நிலையில் சூர்யாவும் , விஜய் சேதுபதியும்  இணைந்து  ப்ரமோஷன்கள் செய்து வந்தனர் .தற்போது அந்த  வீடியோக்கள் சமூக வலைதளங்களில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.


ஆனால், இந்த வீடியோக்களை இணையத்திலிருந்து நீக்கும்படி எச்சரிக்கை அல்லது மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி சமீபமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி, “எங்கள் தரப்பில் இருந்து அழைப்பு வந்திருந்தால் மன்னிப்பு கேட்பேன்” என மடல் ஊடாகவும், நேர்காணலிலும் தனது மனதைக் திறந்து பேசியுள்ளார்.


சமீபத்தில் வெளியான சில ப்ரமோஷன் வீடியோக்களில், விஜய் சேதுபதியும் அவரது மகனும் இணைந்து தோன்றும் காணொளிகள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இதில் தந்தை,மகன் பாசமும், எதிர்கால நட்சத்திரமாக மகனை வளர்த்தெடுக்க விரும்பும் நோக்கும் தென்பட்டது. ஆனால், இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய பிறகு, சில தரப்புகள் அந்தக் காணொளிகளை நீக்குமாறு விஜய் சேதுபதியின் அணியிடம் எச்சரிக்கை விடுத்தனர் என்ற தகவல்கள் வெளியானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


இந்த தகவல் பரவியவுடன், இது உண்மையா? யாரால் இவ்வாறு கூறப்பட்டது? என்பது குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்தன. சிலர் இது தனிப்பட்ட காரணங்களுக்காக செய்யப்பட்டது என கூறினர் மற்றவர்கள், “சமூக வலைதளங்களில் ஆதங்கம் கொண்டவர்கள் செய்யும் செயல்” என விமர்சித்தனர்.


இந்த சர்ச்சைக்குப் பிறகு, நடிகர் விஜய் சேதுபதி விரைவாக பதிலளித்தார். அவர் கூறியதாவது. “இந்த வீடியோக்கள், எங்கள் குடும்பத்தின் ஒரு பாசப்பூர்வமான தருணத்தை பிரதிபலிக்கின்றன. எனது மகனுடன் இணைந்து நானும் பங்கேற்றேன். இது ஒரு பிரமாணமான விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால், எங்கள் தரப்பில் இருந்து யாரேனும் தொடர்பு கொண்டு வீடியோவை நீக்கச் சொல்லியிருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்பேன்.” அவரது பதில், மிகுந்த மகிழ்ச்சியும், மனதின் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. இது ஒரு நடுநிலையான, பொறுப்புணர்வு மிக்க பதிலாகவும், ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 




Advertisement

Advertisement