• Jan 18 2025

காவேரியை கடத்தி செல்லும் பசுபதி... ராகினிக்கு தாலி கட்ட சொல்லி நிவினை மிரட்டும் ராகவ்... காவேரியை தேடி அலையும் விஜய்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சுவாரஷ்யமாக ஒளிபரப்பாகும் மகாநதி சீரியல். ஒரு குடும்ப பின்னணி கதைக்களமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. இதில் நிவினை- ராகவ் தனது அடியாற்களுடன் சென்று அடித்து கடத்தி செல்கிறார். மறுபுறம் கொடைக்கானல் சென்ற விஜய் நண்பருடன் வெளியே சென்று விடுகிறார். அப்போது காவேரி அங்கே தனிமையாக இருப்பதோடு நேற்று கதை நிறைவடைந்திருந்தது இனி என்ன நடைபெற போகிறது என பார்ப்போம் வாங்க.


பசுபதியின் பேச்சை கேட்டு நிவினை கடத்தி சென்ற ராகவ் அவரை ஒரு வீட்டிட்கு அழைத்து செல்கின்றனர். அங்கு ராகினி மணப்பெண் கோலத்தில் அழங்கரித்துக்கொண்டு இருக்கிறாள். கொடைக்கானலில் இருக்கும் பசுபதி  வீடியோ கால் மூலம் கதைக்கிறார். "ராகினியை திருமணம் செய்துகொள் இல்லனா நடக்கிறது வேற என்று கூறுகிறார். அப்போது நிவின் நீ நினைகிறது நடக்காது" என்று கூறுகிறார். 


மற்றோரு புறம் விஜய் நண்பருடன் செல்லவே காவேரி தனது ஊரின் பழைய ஞாபகங்களை மீட்டி பார்த்து கொண்டு கொடைக்கானலை சுற்றி பார்க்க செல்கிறார். அப்போது அவளை பின் தொடர்ந்து வந்த கும்பல் அவளை கடத்தி செல்கின்றனர். எவ்வளவோ முயர்ச்சி செய்தும் அவளால் விடுபட முடியவில்லை. இறுதியில் யார் கடத்தினார்கள் என்று பார்த்தால் பசுபதியின் ஆட்கள் தான் கடத்தி சென்றிருக்கிறார்கள்.

நண்பருடன் வெளியே சென்று வந்த விஜய் -காவேரி  ரூமில் இல்லாததனால் அவரை தேடி அழைக்கிறார். அங்கு பசுபதி காவேரியை "தனியா சிக்கிட்ட  என் வேல முடியுற வரைக்கும் கொஞ்சம் சத்தம் போடாம இரு என்று மிரட்டுகிறார்". வீடியோ காலில் நிவினிடம் காவேரியை காட்டி "ராகினியைத் திருமணம் செய்து கொள் இல்லனா இவல கொன்னுருவன்" என்று மிரட்டுகிறார்.


இனி விஜய் காவேரியை கண்டுபிடிப்பாரா? நிவின் காவேரிக்காக ராகினி கழுத்தில் தாலி காட்டுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...      

Advertisement

Advertisement