தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கவுண்டமணியின் மனைவி சாந்தி தனது 67 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவரது மரணம் சினிமா உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கவுண்டமணியின் குடும்பத்திற்கு பலர் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.நடிகர் செந்தில், சத்யராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கவுண்டமணி வீட்டிற்கு சென்று அவருக்குத் துணைபுரிந்து ஆறுதல் கூறி உள்ளனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜய், கொடைக்கானலில் இருந்து திடீரென சென்னை திரும்பி கவுண்டமணி வீட்டுக்கு நேரில் சென்று சாந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் கவுண்டமணிக்கு ஆறுதல் கூறி உள்ளார்.இந்த நிகழ்வு தற்போது சமூக ஊடகங்களில் பரவியுள்ள நிலையில் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலர் கவுண்டமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
Listen News!