• Jan 18 2025

ராஜபக்சேவை சந்திக்க போகிறாரா நடிகர் விஜய்? சீமான் சும்மா விடுவாரா?

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு ’கோட்’ படத்தின் படப்பிடிப்புக்காக செல்லும்போது ராஜபக்சேவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், கட்சியின் ஆலோசனை கூட்டத்தை சமீபத்தில் புதுச்சேரியில் நடத்தியதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் இலங்கையில் நடைபெற இருப்பதாகவும், சமீபத்தில் இலங்கை சென்ற இயக்குனர் வெங்கட் பிரபு லொகேஷன் பார்த்து விட்டு திரும்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கை வரும் விஜய்யை சந்திக்க ராஜபக்சே மற்றும் அவரது மகன் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இந்த சந்திப்புக்கு இலங்கை அமைச்சர் தொண்டைமான் ஏற்பாடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.



தமிழர்களின் எதிரியாக கருதப்படும் ராஜபக்சேவை விஜய் சந்தித்தால், தமிழகத்தில் கடும் எதிர்வினைகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீமான் உள்ளிட்ட இலங்கை தமிழ் ஆதரவாளர்கள், விஜய் - ராஜபக்சே சந்திப்பு நடந்தால் கடுமையாக விமர்சிப்பார்கள் என்றும் அதன் பிறகு அவர் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியுமா என்ற கேள்விக்குறி எழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.

எனவே விஜய் இலங்கைக்கு செல்வாரா? அப்படியே சென்றாலும் நான் ராஜபக்சேவை சந்திப்பதை தவிர்ப்பாரா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement