• Oct 22 2024

ரஷ்ய சாலைகளில் சேஸிங்.. தந்தை மகன் கெட்டப்பில் விஜய்.. ‘கோட்’ கிளிம்ப்ஸ் வீடியோ..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று அதிகாலை 12.01 மணிக்கு வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோவில் தந்தை மற்றும் மகன் விஜய், ரஷ்யா சாலைகளில் சேஸிங் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதை பார்க்கும்போது இது ஒரு ஹாலிவுட் படத்துக்கு நிகரான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கோட்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என்று ஏற்கனவே இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்து இருந்த நிலையில் இன்று அதிகாலை சரியாக 12.01 மணிக்கு இந்த வீடியோ வெளியாகி உள்ளது.

வெறும் 50 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோவில் ரஷ்யாவில் உள்ள முக்கிய சாலைகளில் தந்தை, மகன் விஜய் பைக்கில் செல்ல, அவர்களை காரில் ஒரு கும்பல் விரட்டிக் கொண்டிருக்கும் காட்சியும் சிலர் பைக்கில் விரட்டிக்கொண்டு இருக்கும் காட்சியும் உள்ளன.

பைக்கை ஓட்டிக்கொண்டு துப்பாக்கியால் பின்னால் வருபவர்களை விஜய் சுடும் காட்சியும் இறுதியில் தந்தை மகன் ஆகிய இருவரது அட்டகாசமான கெட்டப் உள்ள காட்சியும் இருப்பதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் நிச்சயம் இந்த படம் விஜய்க்கு ஒரு அதிரடி சூப்பர் ஹிட் ஆக்சன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த வீடியோவில் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த திரைப்படம் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ள இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.


Advertisement