• Jan 18 2025

விஜய்யை மட்டுமல்ல.. வெங்கட் பிரபுவையும் கொண்டாடிய கேரள ரசிகர்கள்.. இடையில் புகுந்த அஜித் ரசிகர்கள்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து வரும்கோட்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் விஜய் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்ற போது அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அதுமட்டுமின்றி தமிழகம் மற்றும் புதுவையில் செய்தது போல் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்த பிறகு ரசிகர்களை விஜய் சந்தித்து வருகிறார் என்பதும் நேற்று கூட அவர் ரசிகர்களுடன் இணைந்து செல்பி புகைப்படத்தை எடுத்ததை கேரளா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில்கோட்படத்தின் ஒரு சில முக்கிய பணிகளை பிரசாத் ஸ்டூடியோவில் முடித்துவிட்டு நேற்று காலை திருவனந்தபுரத்திற்கு இயக்குனர் வெங்கட் பிரபு சென்ற நிலையில் அங்கு விஜய்க்கு கிடைத்தது போலவே போலவே வெங்கட் பிரபுவுக்கும் விஜய் ரசிகர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்தனர் என்பதும் அவருடன் வந்த பிரேம்ஜிக்கும் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

அது மட்டும் இன்றி வெங்கட் பிரபுவை வரவேற்க விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அஜித் ரசிகர்களும் இணைந்தது தான் மிகப்பெரிய ஆச்சரியமாக உள்ளது. அஜித்துக்கு அவரது கேரியரிலேயே மிகப்பெரிய வெற்றி படம் என்றால் அதுமங்காத்தாஎன்பதுதான், அப்படி ஒரு படத்தை கொடுத்த வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதாக கேரளாவில் உள்ள அஜித் ரசிகர்களும் உற்சாகமாக அவரை வரவேற்றதாக செய்தி வெளியாகியுள்ளது

Advertisement

Advertisement