• Jan 19 2025

ஒரு வாரம் வீட்டில் தன்னந்தனியாக ரிகர்சல் பார்த்த விஜய்.. எதற்கு தெரியுமா?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும்கோட்படத்தின் பாடல் காட்சி ஒன்றுக்காக விஜய் தனது வீட்டிலேயே ஒரு வாரம் ரிகர்சல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கோட்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் மீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் ஒரு அட்டகாசமாக பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

விஜய்யின் ஒவ்வொரு படத்திலும் ஒரு பிரம்மாண்டமான டான்ஸ் பாடல் ஒன்று வைக்கப்படும் என்பது அந்த வகையில் இந்த பாடலும் பிரமாண்டமாக பல நடன கலைஞர்களுடன் கூடிய பாடலாக அமைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த பாடலுக்காக தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சேகர் அழைத்து வரப்பட்டு இருப்பதாகவும் அவரது நடன இயக்கத்தில் மிகச் சிறப்பாக இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.



தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ராம்சரண் தேஜா, மகேஷ் பாபு உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கும், அதே போல் சல்மான்கான், ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களின் படங்களுக்கும் சேகர் தான் நடன இயக்குனராக பணிபுரிந்து வரும் நிலையில் தற்போது அவர் தமிழுக்கு வருகிறார் என்பதும் அதுவும் விஜய் படத்தில் ஒரு அட்டகாசமான பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த பாடலை சூப்பராக யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்துள்ள நிலையில் இந்த பாடல் இந்த படத்தின் ஒரு ஹைலைட்டாக இருக்கும் என்றும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சரியான விருந்தாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த பாடலில் சில கடினமான ஸ்டெப்கள் இருப்பதை கண்ட விஜய் அந்த ஸ்டெப்கள் குறித்து நடன இயக்குனரிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதை ஒரு வாரமாக தன்னுடைய வீட்டில் ரிகர்சல் செய்து வருவதாகவும் இந்த பாடல் மிகவும் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement