லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் நடிக்க
8 முதல் 10 கோடி ரூபாய் வரை
வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர் ஒரு விளம்பர
படத்தில் நடிப்பதற்காக 20 கோடி ரூபாய் பில்
இருப்பதாக கூறப்படுவது கோலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளியான ’அன்னபூரணி’ உள்பட அவரது படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. ’ஜவான்’ திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல்
செய்தாலும் அந்த வெற்றிக்கு நயன்தாராவின்
பங்கு மிகவும் குறைவு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த கதையம்சங்களில் நடித்த படங்களும், பிற முன்னணி நட்சத்திரங்களுடன்
நடித்த படங்களிலும் பெரிதாக வெற்றி பெறாத நிலையில் அவரது மார்க்கெட் இறங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் சமீபத்தில் அவர் ஒரு தனியார்
குளிர்பான நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பர படத்தில்
அவர் அந்த குளிர்பான பாட்டிலுக்கு
முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்றும் உள்ளதை அடுத்து இந்த விளம்பரத்துக்காக அவர்
20 கோடி ரூபாய் பில் போட்டதாக கூறப்படுகிறது.
மூன்று முதல் ஆறு மாதங்கள் ஒரு
படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தாலே நயன்தாரா 8 முதல் 10 கோடி ரூபாய் வரை
சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில மணி
நேரங்கள் நடித்த ஒரு விளம்பர படத்திற்கு
20 கோடி ரூபாய் பில் போட்டது பெரிய
ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த சம்பள தொகையை
நயன்தாரா தரப்பில் உறுதி செய்யவில்லை என்பதும், சமூக வலைத்தளத்தில் கசிந்த
தகவல் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விளம்பர வீடியோவை நயன்தாரா தனது சமூக வலைதளத்தில்
பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த வீடியோ தற்போது
இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Stay tuned!! Coming soon 🎥 pic.twitter.com/kgvSFkQo8t
Listen News!