• Apr 27 2024

டுவிட்டரில் இருந்து அஜித் புகைப்படத்தை நீக்கிய விக்னேஷ் சிவன்!-AK 62வில் இருந்து தூக்கியது உண்மை தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் இன்ஜினியராக நடித்திருப்பார். விஜய்சேதுபதி, நயன்தாராவை வைத்து அவர் இயக்கிய நானும் ரவுடி தான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.

இதனால் அடுத்ததாக நடிகர் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்களை வைத்து இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் பெரியளவில் எதிர்பார்த்த நிலையில், அந்த படம் சரியாக போகவில்லை. சொடக்கு மேல சொடக்கு பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதன் பிறகு நீண்ட வருடங்கள் கழித்தே காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.


லைகா நிறுவனம் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கவுள்ள ஏகே 62 படத்தை நான் தான் பண்றேன் என சமீபத்தில் நடந்த ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியிலும் விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். மேலும், நடிகர் அஜித் தனக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருப்பதாகவும், உங்க ஸ்டைல்ல படம் பண்ணுங்க எதுக்கும் கவலைப்படாதீங்க என ஊக்கப்படுத்தியதையும் சொல்லி இருந்தார்.

ஆனால், திடீரென லைகா நிறுவனம் மற்றும் நடிகர் அஜித்துக்கு இயக்குநர் விக்னேஷ் சிவனின் திரைக்கதையில் நம்பிக்கை வரவில்லை என்றும் அவரது அணுகுமுறை சரியாக இல்லை என்றும் அதீத காலத்தை வீணடித்து விட்டார் போன்ற குற்றச்சாட்டுக்களை அடுக்கி அவரை ஏகே 62 படத்தில் இருந்தே வெளியே அனுப்பி விட்டனர் என தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின.

அது சும்மா வதந்தியாக இருக்கும் அதெல்லாம் அஜித் அப்படி விக்னேஷ் சிவனை ஒப்பந்தம் செய்து விட்டு மாற்றமாட்டார் என கடைசி வரை நம்பிக் கொண்டிருந்த விக்னேஷ் சிவன் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும்படி தற்போது ஏகே 62 படத்தில் இருந்து தான் வெளியேறிய விஷயத்தை உறுதிப்படுத்தி உள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.


ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், நடிகர் அஜித்தின் புகைப்படத்தை டுவிட்டர் கவர் பிக்சராக வைத்திருந்தார். இந்நிலையில், தற்போது அதிரடியாக அந்த போட்டோவை விக்னேஷ் சிவன் நீக்கிவிட்டு புதிய கவர் பிக்சரை வைத்துள்ளார். புதிய புகைப்படமாக "Never Give up" என்கிற வாசகம் அடங்கிய மோடிவேஷனல்  மாற்றி உள்ளார். இதன் மூலம் தான் ஏகே62 படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை அவர் மறைமுகமாக அறிவித்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement