• May 20 2024

‘அஜித் 62’ படத்திற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்- பிஃளானை மாற்றிய விக்னேஷ் சிவன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபம் அஜித் தற்பொழுது தனது 61வது படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சுவாரியார் நடிப்பதால் இப்படத்தின் எதிர்பார்ப்பானது அதிகரித்துள்ளது.

இப்படத்தை இயக்குநர் எச் வினோத் இயக்கி வருகின்றார். இப்படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார். இதனை அனிரூத் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.


இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் விக்னேஷ் சிவன் செயல்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட ‘அஜித் 62’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைக்கப் பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஜனவரி 1 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement