• May 09 2024

அண்ணன் தம்பியை விடாது துரத்தும் சர்ச்சை... காரணம் இதுவா..? விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவை பொறுத்தவரையில் காலத்துக்கு காலம் இடைவிடாமல் பல படங்களும் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. இதில் பல படங்கள் வெற்றியடைகின்ற அதேநேரம் ஒரு சில படங்கள் தோல்வியையும் தழுவி இருக்கின்றன. அதுமட்டுமன்றி ஒரு சில படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பினையும் வேறு சில படங்கள் எதிர் விமர்சனங்களையும் பெற்று வருகின்றன.



இந்தவகையில் சமீபத்தில் வெளியான படமே 'விருமன்'. அதாவது இத்திரைப்படம் ஆனது ஆகஸ்ட் 12-ஆம் திகதி வெளியாகி இருந்தது. இப்படத்தினை இயக்குநர் முத்தையா இயக்கியிருந்தார். கார்த்தி - அதிதி ஷங்கர்  நடிப்பில் கிராமத்து கதையசம்சத்துடன் கூடியதாக இப்படம் உருவாகி இருக்கின்றது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படமானது வரவேற்பினை பெற்று வருகின்ற அதேநேரம் ஒரு சில நெகடிவ் விமர்சனங்களையும் பெற்றிருக்கின்றது.



இப்படத்தில் தன்னுடைய அம்மா சரண்யா பொன்வண்ணனின் தற்கொலைக்கு காரணமான அப்பா பிரகாஷ் ராஜை எப்படியும் பழிவாங்கியே தீர வேண்டும் என நினைக்கும் முரட்டு மகனாக கார்த்தி நடித்துள்ளார். மேலும் தாய்மாமன் ராஜ்கிரண் அரவணைப்பில் வளரும் கார்த்தியை ஏமாற்றி அவரது தாய் சரண்யா பொன்வண்ணனுக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயல்கிறார் பிரகாஷ் ராஜ்? இதன்பின் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதையாக அமைந்திருக்கின்றது. 


இப்படத்தில் ஏதாவது புதிதாக இருக்குமா என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்திருப்பதாக கூறப்படுகின்றது. அதாவது பல படங்களில் பார்த்த அதே கதை தான் இந்த படத்திலும் இருக்கிறது. அதுமட்டுமன்றி இந்த படத்தில் குறிப்பிட்ட சாதியை தூக்கி பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளமை காரணமாகவும் இப்படமானது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றது.


நாட்டில் உள்ள அனைவரும் சமம் என்பது போல் கூறும் விதமாக 'ஜெய்பீம்' போன்ற சாதிக்கு அப்பாற்பட்ட கதையை தயாரித்து நடித்திருந்த சூர்யா ஏன் இப்படி சாதியை தூக்கி பிடிக்கும் கதைகளை தயாரிக்கிறார் என்றும், அதில் ஏன் கார்த்தி நடிக்க ஒப்பு கொள்கிறார் என்றும் கூறி பலரும் அண்ணன் தம்பி இருவரையும் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement