• Jan 26 2026

சினேகன் இல்லாமல் நிகழ்ந்த Birth Day celebration..! இன்ஸ்டாவில் வைரலாகும் வீடியோ..

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்களிடம் பாசமான கவிஞராகவும், பிக்பாஸ் புகழுக்குரிய பிரபலமாகவும் இருக்கும் சினேகன், தற்பொழுது சினிமா உலகிலிருந்து தன்னை கொஞ்சம் விலக்கிக் கொண்டு தனிப்பட்ட வாழ்க்கையில் செவ்வனே இருக்கிறார். இவரது மனைவி கனிகா, சமீபத்தில் தங்களது இரு குழந்தைகளின் பிறந்தநாளை மிகவும் உணர்வுபூர்வமாகவும், வித்தியாசமாகவும் கொண்டாடி இருக்கிறார்.


இந்த நிகழ்வின் சிறப்பு என்னவென்றால், சினேகன் இல்லாமல், கனிகா தனியாகவே இந்த விழாவை கொண்டாடியுள்ளார். அவருடைய பெற்றோர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டுள்ளனர்.

இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் பிறந்தநாள் விழா நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த கனிகா, இந்த நிகழ்வை மிகவும் தனிப்பட்ட முறையில் நடத்தி முடித்துள்ளார். இந்த நிகழ்வின் வீடியோவை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


வீடியோவில் குழந்தைகள் மிகவும் சந்தோஷமாக இருக்கும் காட்சிகளும், குடும்ப உறவுகளுடன் கொண்டாடும் தருணங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement