• Jan 19 2025

விரைவில் வெளியாகும் "வேட்டையன்",வெளியான புதிய அப்டேட் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பயணம் அன்று இன்று அல்லது அந்த படத்துடன் இல்லை இந்த படத்துடன் நிறைவடைகிறது என செய்திகள் நாளுக்கு நாள் வெளியானாலும் அவையொன்றும் உண்மை இல்லை என தலைவரின் அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புக்கள் வெளியாகி வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கின்றன.


இவ்வாறிருக்க சூப்பர் ஸ்டாரின் 170 வது படமாக அறிவிக்கப்பட்ட "வேட்டையன்" படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கடுகதியில் நடைபெற்று வருகின்றன. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இத் திரைப்படத்தை  லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.

வேட்டையன் பராக்.. தீபாவளிக்கு திரைகளைக் கிழிக்க வரும் சூப்பர் ஸ்டார்..  போட்றா வெடியை! - Thentamil

அமிதாப் பச்சன் , ஃபஹத் பாசில் , , மஞ்சு வாரியர் , ரித்திகா சிங் ,அபிராமி மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைத்திருக்கும் இப் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு  அக்டோபர் மாதமளவில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.அண்மையில் நடிகை அபிராமி தனது இன்ஸ்டா பக்கத்தில் "வேட்டையனுக்கு டப்பிங் தொடங்கியது! ஓஹோ! காத்திருக்க முடியாது! " என்னும் பதிவுடன் "வேட்டையன்" படத்திற்கான டப்பிங் வேலையில் தானிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.படத்தின் வெளியீட்டிற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.


Advertisement

Advertisement