• May 08 2024

ஒரு வழியா அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு.. நாயகி மீனாட்சி சவுத்ரி கேரக்டர் பெயர் இதுதான்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள சில நிறுவனங்களில் நடந்து வருகிறது. கிராபிக்ஸ் பணிகளை கவனிப்பது மற்றும் படப்பிடிப்பையும் கவனிப்பது என இயக்குனர் வெங்கட் பிரபு பிஸியாக இருப்பதால் சமீபத்தில் அவர் தனது சமூக வலைதளத்தில் இப்போதைக்கு யாரும் அப்டேட் கேட்க வேண்டாம், ஆனால் அதே நேரத்தில் ஒரு முக்கிய நாளில் சிறப்பான அப்டேட் வரும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி ஆக நடித்த மீனாட்சி சவுத்ரி பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டதை அடுத்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவருக்கு தனது வாழ்த்துக்களை சமூக வலைதளத்தில் கூறினார். அப்போது அந்த பதிவுக்கு கமெண்ட் செய்திருந்த வெங்கட் பிரபு, மீனாட்சி சவுத்ரிக்கு தனது வாழ்த்துக்களை கூறியதோடு, இந்த படத்தில் அவர் ஸ்ரீநிதி என்ற கேரக்டரில் நடிப்பதாக தெரிவித்திருந்தார். இப்போதைக்கு இந்த அப்டேட் போதும் என்று விஜய் ரசிகர்கள் அவருக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.



ஏற்கனவே இந்த படத்தில் சினேகா மற்றும் லைலா ஆகிய இருவரும் அப்பா விஜய்க்கு ஜோடியாக  நடித்து வரும் நிலையில் மீனாட்சி சவுத்ரி, மகன் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ரஷ்யாவில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக படக்குழுவினர் இன்னும் சில நாட்களில் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement