• May 09 2024

பாத்து செய்யுங்க.. சன் டிவிக்கு வெங்கட் பிரபு வைத்த கோரிக்கை..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

இந்த பதிவுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு கமெண்ட் செய்தால் நாங்கள் அவரது இயக்கத்தில் உருவானசென்னை 600028 ’படத்தின் பாடலை ஒளிபரப்புவோம் என சன் டிவி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் அதற்கு கமெண்ட் செய்த வெங்கட் பிரபுபார்த்து செய்யுங்கஎன்று கூறியுள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவானசென்னை 600028’ என்ற திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பழைய திரைப்படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டு வரும் நிலையில்சென்னை 600028 ’ படத்தையும் ரீரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அது மட்டும் இன்றி இந்த படத்தில் உள்ள சில காட்சிகளை சமூக வலைதளங்களை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இது குறித்த ட்ரெண்டிங் வீடியோவை சன் மியூசிக் சேனல் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துஇப்ப இதுதான் டிரெண்டாமே, அதான் இப்படி அப்ரோச் பண்றோம், என்று கூறியதோடு இந்த வீடியோவுக்கு வெங்கட் பிரபு கமெண்ட் செய்தால் நாங்கள்சென்னை 600028 ’ படத்தின் வீடியோ பாடலை முழுதாக சன் மியூசிக் சேனலில் ஒளிபரப்புகிறோம் என்று தெரிவித்துள்ளது.

இதற்கு கமெண்ட் அளித்துள்ள வெங்கட் பிரபுபார்த்து செய்யுங்கஎன்று கூறியுள்ளார். இதையடுத்து விரைவில் இந்த படத்தின் பாடல் சன் மியூசிக் யூடியூப் சேனலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement