• Jan 19 2025

என் மேல மரியாதை இருந்தா இதை செய்..! ரூல்ஸ் போட்ட முத்து? சொந்த வீட்டில் திருடும் மனோஜ்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில்,முத்து பயங்கர கோபத்தில் இருக்க, அங்கு வந்த மீனாவிடம்  எதுக்கு உங்க அம்மா வீட்டுக்கு போன? யாரைக் கேட்டுப்போன? என கேட்க, நான் யாரை கேட்கணும் என்று மீனா சொல்கிறார்.

அதற்கு முத்து உன்ன நான் அங்க போக சொன்னேனா? உங்க தம்பிக்கு அட்வைஸ் பண்ண சொன்னனா? அப்புறம் எதுக்கு என்கிட்ட வந்து சத்தம் போட்டுட்டு போறான், நான் யார்ட்டையும் இவ்வளவு பொறுமையா இருந்ததில்லை, உங்க தம்பி என்ட  பொறுமையை சோதிக்கிறான் என சொல்ல, மீனா என்ன நடந்தது  என கேட்கிறார்.

ஆனால் உண்மையை சொல்ல முடியாத முத்து, அதை நீ உன் தம்பி கிட்டயே கேளு, இனி உங்க அம்மா தங்கச்சிய பாக்கணும் என்றா  இங்க வர சொல்லு, அப்படி இல்லை என்றால் கோவிலில் வச்சு பாரு, உன் தம்பி இருக்கிற வீட்டு பக்கம் போகாத, என் மேல மரியாதை இருந்துச்சுன்னா இத செய் என சொல்லிவிட்டு செல்கிறார்.


இதை அடுத்து சத்யாவுக்கு போன் பண்ணிய மீனா, எதுக்கு மாமாவ  போய் பார்த்த என்று கேட்க, அதற்கு அத நீ அவர்கிட்டே கேளு என்ன பதில் சொல்கிறார் சத்யா.

ஆனாலும், எனக்கு என்ன பிரச்சனை தெரியல. ஆனா உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் மாட்டி தவிக்கிறேன், இனி என்ன நம்ம வீட்டு பக்கம் போக கூடாதுன்னு அவர் சொல்லிட்டாரு என்று சொல்ல, நீ உன் புருஷன் பேச்ச தான் கேட்கணும். நம்ம குடும்பத்தை நான் பார்க்கிறேன். நீ இனி இங்க வராத அப்படி என்று சொல்லி போனை வைக்கிறார் சத்யா.

மறுபக்கம் ட்ரிப் பற்றி ஸ்ருதி பேச, என்னால் வர முடியாது என ரவி சொல்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதியின் அம்மாவும் போன் போட, அவன் வரல என்று சொல்லிட்டான், அம்மா நீங்க போயிட்டு வாங்க என ஸ்ருதி சொல்கிறார்.

அதற்கு ஸ்ருதியின் அம்மா, அப்படி என்றால் 50 வருஷம் கழிச்சு தான் நீங்க ஹனிமூன் போகணும் என கிண்டல் செய்கிறார்.  இதற்கு கோவப்பட்ட ரவி, உனக்கு கூட என் மேல் நம்பிக்கை இல்லை என்று எழுந்து செல்கிறார்.

மறுநாள் விஜயாவிடம் மனோஜ், வேலையை விட்டுட்டேன் ஆனா இன்னைக்கு வேற ஒரு கம்பெனிக்கு இண்டர்வியூ போறேன் என சொல்லி, விஜயாவிடம் பணத்தை கேட்க, என்னிடம் பணம் இல்லை என அவர் மறுக்கிறார்.

இதை அடுத்து விஜயா கிச்சனுக்கு சென்றதும் அண்ணாமலை பாக்கெட்டில் இருந்து 300 ரூபாவை எடுக்கிறார்.

அங்கு வந்த அண்ணாமலை பாக்கெட்டில் வைத்த பணத்தை காணவில்லை என விஜயாவிடம் கேட்க, மனோஜ் தான் பணத்தை எடுத்து இருக்கான் என தெரிந்த விஜயா,  நீங்க வெளியே போய் செலவு பண்ணி இருப்பீங்க, உங்களுக்கு மறதி கூடிட்டு என்று சமாளிக்கிறார்.

அந்த நேரத்தில் மனோஜ் நைசாக வெளியே செல்ல முயல, அண்ணாமலை அவரை பிடித்து சில்லறை காசு இருந்தால் தா என  கேட்க, என்னட்ட காசு இல்லப்பா அக்கவுண்ட்ல தான் இருக்கு என சொல்லி  எஸ்கேப் ஆகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement