• Jul 07 2025

உங்க அண்ணன் ரஜினியைவிட பெரிய கொம்பனா? – தளபதியை சுட்டெரித்த வேல்முருகன் உரை!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் அரசியலும் சினிமாவும் ஒருவரையொருவர் வெகுவாக தாக்கும் சூழலில், தற்போது ஒரு புதிய சர்ச்சை பரபரப்பாகி வருகின்றது. அதன் மையத்தில், தளபதி விஜய் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர் வேல்முருகன் ஆகியோர் உள்ளனர்.


அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் வேல்முருகன் பகிர்ந்த உரை தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த உரையில், அவர் ரஜினிகாந்த் மற்றும் விஜய் குறித்து கேட்ட தீவிரமான கேள்விகள் தான் இந்த விவாதத்துக்குத் தீயிட்டு விட்டது.

தனது உரையில் வேல்முருகன், “இந்த நாட்டின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவர்களையே, இந்த நாட்டின் இளைய தலைமுறை சிகரெட்டை பிடிக்க வைத்து அடிமையாக்கிறார் என்று கேள்வி எழுப்பியவன் நான். உங்க அண்ணன் என்ன ரஜினியை விட பெரிய கொம்பனா?” எனக் கேட்டிருந்தார்.


இந்த உரையின் வீடியோ தற்போது X தளப்பக்கம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற அனைத்து முக்கியமான சமூக ஊடக தளங்களிலும் தீவிரமாக பரவி வருகின்றது. இந்தக்கருத்துக்களுக்கு தற்பொழுது விஜய் ரசிகர்கள் பெரிதும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement