• Aug 20 2025

180 கோடி சம்பளத்துக்கு ஒப்பந்தமான அஜித்! – அடுத்த படத்தின் தயாரிப்பு விவரம்..!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் முன்னணியில் உள்ளவர் நடிகர் அஜித் குமார். தனது தனித்துவமான ஸ்டைல், ரசிகர்களின் பாசம், வெற்றி கொடுத்த திரைக்கதைகள் ஆகியவற்றால் தொடர்ந்து ஹிட் கொடுத்துவரும் அஜித், தற்போது தனது அடுத்த படத்திற்கான புதிய கூட்டணியில் இணையவுள்ளார்.


தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, அஜித்தின் அடுத்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும், இப்படத்தை 'குட் பேட் அக்லி' படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்திற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாத இறுதிக்குள் புராஜெக்டுக்கான அட்வான்ஸ் தொகை கைமாற்றம் நடைபெற இருக்கின்றது. அதையடுத்து, சினிமா வட்டாரங்களில் இருந்து அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல் ஒன்று வெளியாயுள்ளது. 


அது என்னவென்றால், அஜித் குமாருக்கு இப்படத்திற்கு ரூ.180 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. அத்துடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ரூ.12 கோடி சம்பளம் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisement

Advertisement