• Apr 02 2025

விமான நிலையத்தில் அலப்பறையை கிளப்பிய பாடகர் வேல்முருகன்! உடனடியாக பயணத்தை கேன்சல் பண்ணிய அதிகாரிகள்! பரபரப்பு சம்பவம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நாட்டுப்புற பாடகரான வேல்முருகன் நேற்று மாலை இண்டிகோ  ஏர்லைன்ஸ் விமான மூலம் திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதன் போது அவர் மது போதையில் இருந்ததாக கூறி அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதிக்க விடவில்லை.

இதை அடுத்து நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காரணத்தால், விமான நிலைய அதிகாரிகள் வேல்முருகனின் விமான பயணத்தை ரத்து செய்துள்ளனர்.


அதன்பின் நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன் மன்னிப்பு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அவரை ஒரு விமானத்தில் திருச்சி அனுப்பி வைத்துள்ளார்கள்.


இந்த சம்பவம் குறித்து விமான நிலைய பொறுப்பு அதிகாரிகள்  விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தற்போது இது தொடர்பிலான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement