• Jan 18 2025

வனிதா விவகாரத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்- கடும் கோபத்தில் இருக்கும் பிரபல பாடகி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகை என்ற அடையாளத்தோடு அறிமுகமாகியவர் தான் நடிகை வனிதா. பல சர்ச்சைகளுக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானார். இதனை அடுத்து பல ரியாலிட்ரி ஷோக்களில் பங்குபற்றி வருவதோடு திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

இவரின் மகளான ஜோவிதா பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றார்.இதனால் இந்த நிகழ்ச்சி குறித்து விமர்சனத்தையும் பிரபல சேனல் ஒனறின் மூலம் செய்து வருகின்றார்.


 எனவே நள்ளிரவு ஒரு மணி அளவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு தனது காரை எடுக்க சென்ற போது, அங்கு வந்த மர்ம நபர் ரெட் கார்டு கொடுக்குறீங்களா? என்று கேட்டு தன்னை கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடியதாகவும், அந்த மர்ம நபரின் சிரிப்பு தன் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும் வனிதா கூறி, தாக்கப்பட்ட போட்டோவை பதிவிட்டு இருந்தார். 

 இதுகுறித்து, பேசிய பயில்வான் ரங்கநாதன், நள்ளிரவில் பிரதீப்பின் ஆதரவாளர்கள் தாக்கிவிட்டதாக வனிதா கூறி இருக்கிறார். கண் வீங்கும் அளவிற்கு ஒருவர் தாக்கி இருக்கும் போது அதுகுறித்து வனிதா ஏன் போலீசில் புகார் கொடுக்கவில்லை. ஆனால், விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் இருந்து போன் செய்த போது அவரின் போன் ஸ்விட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.


இந்நிலையில், இதுகுறித்து பேசிய பாடகி சுசித்ரா, வனிதா தாக்கப்பட்ட விஷயத்தில் பல தலைகள் உருளுகிறது, பலரின் மீது சந்தேகம் வருகிறது. காவல்துறையோ எல்லா வேலையையும் விட்டு இந்த வேலையில் முழுவீச்சில் இருக்கிறார்கள். வனிதா விஜயகுமார் தாக்கப்பட்டது உண்மையா என கேட்டு பலர் அவருக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

மேலும், அவர் இப்போது எங்கே இருக்கிறார், என்ன ஆச்சு என்று யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இதனால், வனிதா இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த பேட்டியில் சுசித்ரா பேசி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement