தமிழின் திரையிசை பாடல்களில் தொடரும் இலக்கியம் தான் தமிழ் திரையிசை பாடல்களின் வெற்றிக்கும் அடிப்படை நாதத்திற்கும்காரணமாய் இருந்து வருகின்றது என்று சொன்னால் யாராலும் மறுக்க முடியாது.அந்த வகையில் தமிழ் பாடல்களின் வரிகளுக்கு சொந்தமான கவிஞர்களில் முன்னிடம் பிடிப்பவர் கவிப்பேரரசு வைரமுத்து.
திரையுலகம் தாண்டிய வைரமுத்துவின் எழுத்துலகம் வாசர்கள் அனைவர் நெஞ்சங்களையும் வென்று தனக்கான ஓர் இடத்தை பிடித்துள்ளது.கவிதை,சிறுகதை,என்று இதிகாசம் வரை தந்துள்ள வைரமுத்துவின் எழுத்துக்களுக்காகவே ஆயிரமாயிரம் ரசிகர்கள் அவரை பின் தொடர்கிறார்கள்.
நேற்றைய தினம் கலைஞர் நினைவு நாளில் நினைவுக் கவிதையை பகிர்ந்திருந்தார் வைரமுத்து. கவிஞரது இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு கவிஞர் தொகுத்த 'கலைஞர் 100 கவிதைகள் 100' என்ற கவிதை தொகுப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது முகாம் அலுவலகத்தில் வெளியிட்டு வைத்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு
நிறைவை முன்னிட்டு
நான் தொகுத்த
'கலைஞர் 100 கவிதைகள் 100'
என்ற நூலை
மாண்புமிகு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
தமது முகாம் அலுவலகத்தில்
வெளியிட்டார்
திராவிடர் கழகத் தலைவர்
கி.வீரமணி முதல்நூல்
பெற்றுக்கொண்டார்
அமைச்சர்கள்
துரைமுருகன், பொன்முடி
கே.என்.நேரு, எ.வ.வேலு… pic.twitter.com/UbQqixX2aQ
Listen News!