நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படமான அயலான் திரைப்படம் நேற்று 12ம் திகதி திரைக்கு வந்தது. இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது என்று தான் சொல்ல வேண்டும். காரணம் ரசிகர்கள் விமர்சனங்கள் அவ்வாறு இருந்தது.
இந்நிலையில் தற்போது புளூ சட்டை மாறன் இந்த திரைப்படத்திற்கு இவ்வாறு விமர்சனம் தெரிவித்துள்ளார். இன்றைக்கு நாங்க பார்க்க போற திரைப்படம் சிவகார்த்திகேயனின் அயலான். இந்த படம் பெரியவர்களுக்கான படமே இல்ல சின்ன பிள்ளைகள் பார்க்க வேண்டிய படம். ஹீரோ ஒரு இயற்க்கை ஆய்வாளர். விவசாயம் பண்ணி அதுல தோல்வி அடைஞ்சிட்டு டவுன் பக்கம் வாராரு, அப்போதுதான் பூமில இருக்குற மக்கள் தான் செய்றது தப்புனு தெரியாம இயற்கைக்கு எதிராக எல்லா வேலையும் செய்றாங்க.
இத கட்டுப்படுத்தனும் என்று வேற்றுகிரகத்தில் இருந்து ஒரு ஏலியன் பூமிக்கு வருது, இந்த ஏலியனும் ஹீரோவும் சேர்ந்து இந்த பூமியை காப்பாத்துகிறார்களா என்பதுதான் கதை. இந்த படத்த பார்க்க போகும் போதே நாங்க ஒரு குழந்தையாக மாறித்தான் படத்தை பார்க்க போக வேண்டும்.
இந்த படத்துல சின்ன பிள்ளைகளுக்கு விரும்பும் வகையில் அயலான் ஆடுவது, காமெடி பண்ணுவது, கதைப்பது என ஒரு சில விடையங்கள் சிறுவர்களை கவர்கிறது. மற்றபடி ஒன்னும் இல்ல, படத்தில ஹீரோ லைப் சுவாரஷ்யமே இல்ல, லவ் போசன் அதுலையும் சுவாரஷ்யம் இல்ல, வில்லன் ஹீரோ அதுலயும் ஒன்னும் இல்ல.
அப்புறம் ஹீரோவோட 2 காமெடியன் இருக்காங்க அவங்க பண்ணுற காமெடிக்கு சிரிப்பே வரல, இதுல எ.ஆர் ரகுமான் மியுசிக் எந்த இடத்துலயும் பொருத்தமா இல்ல, பாட்டும் கேக்குற மாதிரி இல்ல. ஆகா மொத்தத்துல படம் அயலனோட துரமாவே இருக்கு என்று கூறியுள்ளார்.
Listen News!