• Jan 19 2025

பாக்கியா கல்யாணத்துக்கு பிள்ளையார் சுழி போடும் செல்வி! முகம் மாறிய எழில்! ராதிகா சொன்ன அட்வைஸ்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ரெஸ்டாரண்டில் பாக்கியா, பழனிச்சாமி, செல்வி என எல்லாரும் அங்கு இருக்க,  அங்கு வரும் கார்கள் பார்க்கிங் இடம் இல்லாமல் வேறொரு ஹோட்டலுக்கு சென்று விடுவதை அவதானிக்கின்றார்கள்.

இவை அடுத்து பழனிச்சாமி நான் ரெஸ்டாரன்ட் வந்த முதல் நாள் இத நோட் பண்ணினான். ஆனா நெகட்டிவா சொல்ல வேண்டாம்  என்று தான் சொல்லல. முதலில் இந்த பார்க்கிங் பிரச்சனைக்கு  தீர்வு கண்டுபிடிக்கலாம் என்று கிளம்பி செல்கிறார்.

பாக்கியாவுக்கு பழனிச்சாமி ஓடிவந்து உதவுவதை பார்த்து அக்காக்கு மட்டும்தான் உதவி செய்வீங்களா என செல்வி கலாய்க்கிறார். மேலும் எழிலிடம் அவங்க இரண்டு பேருக்கும்  கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று சொல்லுகிறார் செல்வி. எழில் இத பத்தி நானும் அம்மா கிட்ட பேசி அடி வாங்கிருக்கேன் என்று சொல்கிறார். இருந்தாலும்  அப்படியே விட முடியாது இல்லையா என்று செல்வி கூறுகிறார்.


அடுத்ததாக பழனிச்சாமி காரில் சென்று கொண்டிருக்க போகும் வழியில் ஒரு காலி இடத்தைப் பார்த்து அந்த இடத்தை பேசி  ரெடி பண்ணலாம் என யோசியத்து அதற்கான ஓனரிடம் கான்டக்ட் நம்பரையும் வாங்கிக் கொள்கிறார். உடனே இந்த விஷயத்தை பாக்கியாவிடம் சொல்ல, அவர் வாடகை அதிகம் இருந்தால் என்னால் கொடுக்க முடியாது என்று சொல்ல, ஆரம்பத்தில் இந்த மாதிரி செலவுகள் வரும் தான் அதெல்லாம் முதலீடு என்று சொல்லி அவரிடம் பேசிப் பார்க்கலாம் என்று கூறுகிறார்.

அதன் பிறகு வீட்டில் ஈஸ்வரி ஜெனியின் குழந்தை வைத்து கொஞ்சிக் கொண்டிருக்க ராமமூர்த்தி வெளியில் செல்ல கிளம்ப, நிலா பாப்பா ஓடி வந்து தாத்தாவிடம் சாக்லேட் கேட்கிறார். அதற்கு வெளிய போறேன் வரும்போது வாங்கிட்டு வாரேன் என சொல்லி கிளம்பி செல்கிறார் ராமமூர்த்தி. நிலா ஜெனியின் குழந்தையை தொட்டு தொட்டு விளையாட ஈஸ்வரி நிலாவை சோபாவின் கீழ இறக்கி விடுகிறார்.

ராதிகா நிலாவை கூட்டிச்சென்று வெளியில் விளையாட, எழில் அங்கு வந்ததும் நிலா அப்பா என ஓடுகிறார். அத்துடன் ஈஸ்வரி மேல்  கம்பளைண்ட் செய்கிறார். அதற்கு ஈஸ்வரி அவள் குழந்தையை தொட்டு தொட்டு விளையாடிட்டு இருந்தா அவள் பெரிய பிள்ளை தானே என சொல்ல, எழிலின் முகம் மாறுகிறது. பிறகு நிலாவை கூட்டிக்கொண்டு மேலே சென்று விடுகிறார்.

மறுபக்கம் கோபி ரெஸ்டாரண்டில் பிசினஸ் ரொம்ப நல்லா போகுது என ராதிகாவுடன் பேசிக் கொண்டிருக்க, அங்கு செஃப், காலிபிளவர் வச்சி புதுசா ஒரு டிஷ் பண்ணி இருக்கேன் என கொண்டு வந்து கொடுக்க, கோபி அதை சாப்பிட்டு பார்த்து பாராட்டுகிறார். ராதிகா போதும் என சொல்லி இப்பதான் விளங்குது உங்க பிசினஸ் ஏன் லாஸ்ட் ஆகுது என்று.  

இப்படி எல்லார்கிட்டயும் கொஞ்சம் பேசிட்டு இருந்தீங்கன்னா அவங்களோட பேச்சை நாம பிறகு கேட்கணும். எல்லார் கூடவும்  கொஞ்சம் ஸ்டிரிக்கா இருங்க என ராதிகா அட்வைஸ் பண்ணுகிறார். அதுவும் சரி தான் என்று கோபி யோசிக்கிறார்.  இதுதான் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

Advertisement

Advertisement