கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் தான் ‘வா வாத்தியார்’.
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதை சொல்லும் பாணிக்காக ரசிகர்களிடையே பெயர் பெற்றவர் இயக்குநர் நலன் குமாரசாமி. ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ போன்ற படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிய நலன் குமாரசாமி, பல ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கியுள்ள திரைப்படம் ‘வா வாத்தியார்’. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.

நலன் குமாரசாமி இயக்கம் என்பதால், இந்த படமும் வித்தியாசமான திரைக்கதை, நகைச்சுவை கலந்த உணர்ச்சிகள் மற்றும் சமூக கருத்துடன் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பை படம் பெருமளவில் பூர்த்தி செய்துள்ளதாக திரையரங்குகளில் இருந்து வரும் கருத்துகள் தெரிவிக்கின்றன.
‘வா வாத்தியார்’ திரைப்படத்தில் கார்த்தி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். இளம் ரசிகர்கள் மத்தியில் க்ரித்தி ஷெட்டியின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த்ராஜ் போன்ற அனுபவமிக்க நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முதல் பாதி சற்று மெதுவாக சென்றாலும், இடைவேளைக்கு பிறகு கதை பிடிப்புடன் நகர்வதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். கார்த்தியின் காமெடி டைமிங் மற்றும் உணர்ச்சி காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், மூன்று நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்து வரும் ‘வா வாத்தியார்’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் 5.2 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!