• Aug 04 2025

எந்த அடிப்படையில் தேசிய விருது வழங்கப்படுகிறது..? சர்ச்சையை கிளப்பிய ஊர்வசியின் கேள்விகள்!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

சமீபத்திய நேர்காணலில் கலந்துகொண்ட பன்முகத் திறமையாளர் நடிகை ஊர்வசி, தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட பின்னணியில் தனது மனக் கணிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதன்போது, துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது, ஏன் சிறந்த நடிகர் / நடிகைக்கான விருது வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி தேசிய விருது விழா குழுவின் தேர்வு முறைமை மீது கேள்வி எழுப்பியுள்ளார்.


அந்த நேர்காணலில் ஊர்வசி, "உள்ளொழுக்கு" படத்துக்காக எனக்கும் "பூக்காலம்"படத்துக்காக நடிகர் விஜயராகவனுக்கும் துணை நடிகை, நடிகருக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. எங்கள் இருவருக்கும் ஏன் சிறந்த நடிகர்களுக்கான விருது பகிர்ந்தளிக்கப்படவில்லை. 

நாங்கள் பாடுபட்டு நடிக்கிறோம் வரி செலுத்துகிறோம். அரசு தருவதை தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என சொல்வது சரியில்ல. அரசு வழங்கும் விருதை ஓய்வூதியமா கருத முடியாது." எனக் கண்டனம் தெரிவித்துள்ளார். 


இந்த கருத்து, தேசிய விருதுகள் வழங்கப்படும் தகுதிகள், மற்றும் பரிந்துரைக்கும் குழுவின் தீர்வுகள் குறித்து புதிய விவாதங்களை கிளப்பி இருக்கிறது. 

Advertisement

Advertisement