தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்திற்கு மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் உண்டு. இவர் தனது உழைப்பை நம்பி முன்னுக்கு வந்தவர். தற்போது உலகளவில் இவரது புகழ் பரவியுள்ளது.
ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த பாட்ஷா படத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமாக சம்பவத்தை அப்படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான படம் பாட்ஷா. இந்தியில் அமிதாப் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான ஹம் என்ற படத்தின் ரீமேக்காக தமிழுக்கு ஏற்றபடி சிறு சிறு மாற்றங்கள் செய்து வெளியான இந்த படம் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது.
ரியல் ஃலைப்பில் ஆட்டோ டிரைவரைாகவும், ஃபிளாஷ்பேக்கில் ஒரு டானாகவும் ரஜினிகாந்த் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த படம் வெளியான பிறகு ரஜினிகாந்த் நடித்த பெரிய ஆக்ஷன் படங்கள் அனைத்திலும் பாட்ஷாவின் ரெப்ரன்ஸ் இருக்கும். அதேபோல் பாட்ஷா படத்தை தழுவி தமிழில் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த அளவிற்கு ரஜினிகாந்த் வாழ்க்கையை உச்சத்திற்கு கொண்டு சென்ற பாட்ஷா திரைப்படத்தில் பாட்ஷா பாரு பாட்ஷா பாரு பாடல் இப்போது கேட்டாலும் உடலில் புள்ளரிக்கும்.
எஸ்.பி.பி குரலில் வந்த இந்த பாடல் ஒரு ரியல் ஃலைப் டானுக்கு அமைந்த பாடல் போல் இருக்கும். இந்த பாடலின் ஒரு காட்சியில் ரஜினிகாந்த் முன்பு தட்டில்ணம் இருக்கும். உள்ளூர் டான்கள் பலரும் ரஜினியை சந்தித்து அவரது கையில் முத்தமிட்டு செல்வார்கள்.
இந்த காட்சியை படமாக்க சென்ற போது எல்லாம் ஓகே ஏதோ ஒன்று மிஸ் ஆகுதே என்று யோசித்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, டான் பக்கத்தில் ஒரு நாய் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்துள்ளார்.
ஆனால் படப்பிடிப்புக்கு எல்லாம் ரெடி நாய் எங்கே போய் படிப்பது என்று தெரியாமல் இருந்துள்ளனர். அப்போது புரோடக்ஷன் ஆபீசில் ஒரு பெரிய நாய் இருந்துள்ளது.
அந்த நாயை பார்த்தால் அனைவருக்கும் பயம் ஆனால் ரஜினிகாந்த் அந்த நாயை தலையில் தடவிக்கொடுத்தவுடன் அவரது அருகில் படுத்துவிட்டது. இது எங்களுக்கே பெரிய ஆச்சரியம்.
அதன்பிறகு அந்த காட்சியை ஷூட் செய்தோம் படத்தில் அந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார்.
Listen News!