• Apr 17 2026

13 ஆண்டுகள் கழித்து பாலிவுட் உலகில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள த்ரிஷா! வெளியான சூப்பர் அப்டேட்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா.

இவர் கமல், விஜய், ரஜினி, அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார்.

40 வயதிலும் இளமையாக எப்போதும் பிட்டாக காணப்படுகிறார், அவரைப் பார்த்து இவருக்கு வயதே ஆகாதா என பொறாமைப்படுபவர்களும் உள்ளார்கள்.


மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து மக்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை த்ரிஷா, அதன்பின் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்த த்ரிஷா, தற்பொழுது மலையாளத்தில் உருவாகி வரும் ராம் மற்றும் ஐடென்டிட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில், சுமார் 13 ஆண்டுகள் கழித்து தற்பொழுது பாலிவுட் உலகில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார் நடிகை த்ரிஷா.

அதன்படி, பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் பாலிவுட் உலகில் இயக்க உள்ள ஒரு படத்தில் நடிக்க தற்பொழுது ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா. 

இந்த திரைப்படத்தில் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக த்ரிஷா  நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement