• Jan 19 2025

கேப்டன் விஜயகாந்த கொன்னுட்டாங்க... அடுத்தது உதயநிதி சார் தான்! சர்ச்சையை கிளப்பிய பிரேமம் பட இயக்குநர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜயகாந்த் இன்றைய தினம் உயிரிழந்ததை தொடர்ந்து, தமிழ்த் திரையுலகினர் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ் நாடே கண்ணீரில் மூழ்கியுள்ளது.

மேலும், நடிகர் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்த பிரபலங்கள் மட்டுமின்றி மக்களும் அலைமோதி வருகின்றனர். அத்துடன் அவரது மனைவிக்கும் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விஜயகாந்தை யாரோ கொன்னுட்டாங்க என பிரேமம் பட இயங்குநர் சலசலப்பு ஒன்றை கிளப்பியுள்ளார்.


அதன்படி, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்ட பிரேமம் பட இயக்குனரான அல்போன்ஸ் அதில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில், 'இது உதயநிதி அண்ணாவுக்கு.. நான் ஏற்கனவே சொன்னது போல கலைஞர் அவர்களை யாரோ பழி தீர்த்தது போல, இரும்புப் பெண்மணி ஜெயலலிதா அவர்களை யாரோ பழி தீர்த்தது போல, யாரோ தான் தற்போது விஜயகாந்த் அவர்களையும் கொன்னுட்டாங்க... இவ்வாறு அவர்களின் அடுத்த இலக்கு நீங்கள் அல்லது ஸ்டாலின் சார் தான்' என கூறியுள்ளார்.



Advertisement

Advertisement