• Jan 19 2025

எலிமினேஷன் கார்டில் நெயில் பாலிஷ் அடித்த புல்லி கேங்.. பிக் பாஸிடம் சீக்ரெட்டாக சொன்ன அர்ச்சனா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களின் பொழுது போக்கிற்காக நடத்தப்படும் ஒரு ரியாலிட்டி ஷோ தான். இதில் தற்போது சீசன் 7 நடந்து கொண்டு இருக்கின்றது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது இன்னும் ஒரு சில வாரத்தில் இறுதிக் கட்டத்தை எட்டவுள்ளது.

இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் மக்களால் அதிகமாக பேசப்படுகின்ற நபர்களாக மாயா, பூர்ணிமா காணப்படுகின்றனர். அதிலும் மாயா செய்யும் அட்டூழியங்களை கமல் கேட்பதே இல்லை என்ற குற்றச்சாட்டும் அடிக்கடி முன்வைக்கப்படுகின்றது.


இந்த நிலையில், இந்த வாரம் நடக்கும் எலிமினேஷன் டாஸ்க்கில் மாயாவும் பூர்ணிமாவும் சேர்ந்து அதில் நெயில் பாலிஷ் வைத்து மார்க் செய்து இருக்கிறார்கள்.

இவ்வாறு, அவர்களுக்கு கார்டு வரும்போது சரியாக அந்த எலிமினேஷன் கார்டை தேர்வு செய்து அவர்கள் நினைக்கும் நபர்களை வெளியே அனுப்புகிறார்கள். அதன்படியே மணி, விஷ்ணு மற்றும் ரவீனாவை அவர்கள் வெளியே அனுப்பியுள்ளார்கள்.

100 கேமராக்கள் இருக்கும் அந்த பிக் பாஸ் வீட்டில் இதை யாருமே கவனிக்கவில்லை என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. அதையும் தாண்டி அர்ச்சனா இதை கண்டுபிடித்து பிக் பாஸ் இடம் சீக்கிரம் ஆக சொன்னார். ஆனால் பிக் பாஸ் அந்த புகாரை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. தற்போது இது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சர்ச்சையாக இருக்கிறது.

Advertisement

Advertisement