தமிழ் சினிமாவில் இந்தாண்டின் முக்கிய வெளியீடுகளில் ஒன்றாக கவனம் பெற்றுள்ள படம் “கருப்பு”. சூர்யா, த்ரிஷா, நட்ராஜ் மற்றும் இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை R. J.பாலாஜி எழுதி இயக்கியதுடன், முக்கிய வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். Dream Warrior Pictures தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார்.
கடந்த 15ஆம் தேதி வெளியான “கருப்பு” திரைப்படம் ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், பின்னர் குடும்ப ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

குறிப்பாக படத்தின் திரைக்கதை, சூர்யாவின் மாறுபட்ட நடிப்பு, ஆர்.ஜே. பாலாஜியின் எதிர்மறை கதாபாத்திரம் மற்றும் பின்னணி இசை ரசிகர்களிடம் பாராட்டுகளை குவித்துள்ளது. சமூக வலைத்தளங்களிலும் படத்திற்கு ஆதரவான கருத்துக்கள் அதிகரித்து வருவதால், திரையரங்குகளில் கூட்டமும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், “கருப்பு” திரைப்படத்தின் முதல் மூன்று நாட்கள் உலகளாவிய வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. பாக்ஸ் ஆபீஸ் தகவல்களை வெளியிடும் சாக்நிக் தரவுகளின்படி, படம் உலகம் முழுவதும் ரூ.120.75 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வார நாட்களிலும் இதே வரவேற்பு தொடர்ந்தால், படம் மிகப்பெரிய வெற்றிப் பட்டியலில் இணையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Listen News!