• Jan 19 2025

இந்த வாரம் எவிட்டான போட்டியாளர் இவர் தான்! சற்றுமுன் கசிந்த உறுதியான தகவல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீடு தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவில் சிக்கியுள்ளது. இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் எவிட்டான போட்டியாளர் தொடர்பில் தகவல் கசிந்துள்ளது.

அதன்படி, பிக் பாஸ் சீசன் 7 இல் நான் தான் டைட்டில் வின்னர் என மார்த்தட்டிக் கொண்டிருந்த சரவண விக்ரமே இந்த வாரம் எவிட் ஆகியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் தற்போது வரையில் அவரது உண்மை முகம் தெரியவே இல்லை. கேப்டனாக அவர் இருந்த வாரம் கூட அவராக எந்த முடிவையும் எடுத்ததாகத் தெரியவில்லை என அவர் தொடர்பில் பல விமர்சனங்கள் குவிக்கப்பட்டது.


எனினும், பிக் பாஸ் வீட்டில் ஒரு கட்டத்தில் தான் டைட்டில் வின் பண்ண வாய்ப்பு இருப்பதாக அவரே கூறிக்கொண்டார். இதை தொடர்ந்து அவர் தொடர்பான மீம்ஸ்கள் வைரலானது.

அதேவேளை, முதல் சீசனில் எப்படி ரித்திகா அமைதியாக இருந்து டைட்டில் வின் பண்ணினாரோ அதே மாதிரி இந்த சீசனில் நிச்சயம் கப்பு எங்க சரவண விக்ரமிற்குத்தான் என இன்னொரு புறம் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர்.

இவ்வாறான நிலையில், இந்த வாரம் குறைந்த வாக்குகளுடன் காணப்பட்ட போட்டியாளர்களுள் சரவண விக்ரமும் அடங்கியுள்ளார். இதன் காரணமாகவே அவர் எவிட் ஆகியுள்ளார் என குறிப்பிடப்படுகிறது.

Advertisement

Advertisement