• Mar 28 2025

விஷால் காதில் சொன்னது இதுதான்..! ஓபனாக பேசிய பிக்பாஸ் அன்ஷிதா..!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகவும் பிக் பாஸ் சீசன் 8ல் இருந்தே எலிமினேஷன் ஆகி வெளியே வந்த அன்ஷிதா மற்றும் ஜெப்ரி சமீபத்தில் பிக்பாஸ் அன்லிமிட்டட் நிகழ்ச்சியில்  கலந்து கொண்டனர். கலகலப்பாக பேசிய அன்ஷிதா வெளியேறும் முன் விஷால் காதில் இதுதான் சொன்னேன் என்று ஓபனாக பேசியுள்ளார். 


பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த வாரங்களில் டபுள் எலிமினேஷன் நடைபெற்றது அதில் ஜெப்ரி மற்றும் அன்ஷிதா எலிமினேஷன் ஆனார்கள். தற்போது பிக்பாஸ் அன்லிமிட்டட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்ஷிதாவிடம் தொகுப்பாளர் சபரி "விஷால் காதில் என்ன சொன்னிங்க?" என்று கேட்டார். 


அதற்கு அன்ஷிதா இவ்வாறு பதிலளித்தார் " வெளிய எல்லாரும் வேற மாதிரி சொல்லுறாங்க, அர்னவ் பெயர் சொன்னதா சொல்லுறாங்க. உண்மைக்கும் நான் லவ் யு எல்லாம் சொல்லவில்லை மக்களே. அப்படி சொல்லணும் என்றா ஓபனாக சொல்லி இருப்பேன். நான் பிக் பாஸ் வீட்டுல இருந்துட்டு வந்து இருக்கேன் சோ பயம் இல்லை அங்கையே லவ் சொல்லணும் என்றால் சொல்லி இருப்பேன். உண்மைக்கும் நான் விஷால் காதில் சொன்னது என்னுடைய முன்னால் காதலனின் பெயர் தான். காதலும் சொல்லவில்லை, அர்னவின் பெயரும் சொல்லவில்லை" என்று ஓபனாக கூறினார்.

Advertisement

Advertisement