பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து ரிலீசாக இருக்கும் திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இந்த திரைப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எல்லாம் ஹிட்டாகி வரும் நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான அப்டேட் கிடைக்கபெற்றுள்ளது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் வெளியான " என்னை இழுக்குதடி" பாடல் பட்டி தொட்டி எல்லாம் வைரலானது. இப்படத்தின் அடுத்த பாடலும் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ம் திகதி ரிலீசாக இருக்கிறது. திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா தொடர்பான அப்டேட் வெளியான நிலையில் ஜனவரி 7 ஆம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைப்பெறவுள்ளது என செய்திகள் வலம் வருகின்றன.
Listen News!