தமிழ் திரையுலகில் “ஆக்ஷன் கிங்” என்று அழைக்கப்படும் அர்ஜுன் சமீபத்தில் பகிர்ந்த ஆரோக்கியம் குறித்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. உடல் கட்டுக்கோப்பு, ஒழுங்கான வாழ்க்கை முறை காரணமாக பல தலைமுறைகளுக்கும் முன்மாதிரியாகத் திகழும் அவர், தனது உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி குறித்த சிந்தனைகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

அர்ஜுன் அதன்போது, “நான் ஸ்பெஷல்லா எந்த உணவும் சாப்பிட மாட்டேன். வீட்டில என்ன இருக்கோ அதைத் தான் சாப்பிடுவேன். ஆனா, ஹோட்டலில சாப்பிடுறதை மட்டும் முடிஞ்ச அளவு தவிர்த்துவிடுவேன். நீங்க சாதாரண உணவை சாப்பிட்டே பிட்டா இருக்கலாம். அதுக்கு அடிப்படை என்னன்னா ஆரம்ப காலத்துலயே நல்லா உடற்பயிற்சி செஞ்சு உங்க உடம்போட அஸ்திவாரத்தை பலமா போடணும். அப்படி செஞ்சா பிற்காலத்தில நீங்க சாதாரணமா சாப்பிட்டே ஆரோக்கியமா இருக்கலாம்.” என்று கூறியுள்ளார்.
இந்த எளிய ஆனால் ஆழமான கருத்துக்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பலர் அவரது வாழ்க்கை முறை குறித்து பாராட்டுக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
அர்ஜுன் தனது இளமைக் காலத்திலிருந்தே உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தவர். ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பது, கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பராமரிப்பது போன்றவற்றுக்கு பின்னால் கடின உழைப்பும் ஒழுக்கமும் இருப்பதாக அவர் பல முறை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!