• May 19 2024

அசீம் கிட்ட இருக்கிற பிரச்சினையே இது தான் கண்டிப்பா டைட்டில் வின்னர் இவங்க தான்- குயின்சி தந்த தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

56 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த குயின்சி ஸ்டான்லி கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறினார்.படுத்துத் தூங்குவதை தவிர வேற எதுவும் செய்யாமல் 50 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் இருந்து கரும்பு தின்னக் கூலியும் வாங்கிக் கொண்டு சென்றார் என ட்ரோல் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வௌியேறிய குயின்சி பல்வேறு சேனல்களுக்கும் பேட்டியளித்து வருகின்றார்.அந்த வகையில் பிரபல செனல் ஒன்றில் பேட்டியளித்திருந்த போது வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் குறித்து ஒவ்வொரு கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றார்.


அப்போது அசீம் குறித்து பேசிய குயின்சி, "அவரு பத்தி நாம யோசிச்சு பாத்தா, அவர் சிறந்த போட்டியாளர் தான். அவரு சொல்ற விதம் தான் பிரச்சனை" என குயின்சி தெரிவித்தார். அதே போல, விக்ரமன் பற்றி பேசிய குயின்சி, "நான் வெளியே வரும் போது அவருகிட்ட, 'நீதி, நேர்மை, நியாயம் இப்படியே இருங்கன்னு' சொல்லிட்டு வந்தேன்


 ஏனென்றால், அவர் அது எல்லாம் ரொம்ப பார்ப்பாருல்ல. அவரு அப்படியே விளையாடுனாருன்னா அடுத்த கட்டத்துக்கு போவாரு" என குயின்சி தெரிவித்தார்.அதே போல, இந்த முறை பிக்பாஸ் சீசனில் டைட்டில் வின்னராக யார் வர வாய்ப்பு உள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த குயின்சி, ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகிய இரண்டு பேரின் பெயர்களை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement