• Apr 26 2024

நடிகர் விவேக்கின் திடீர் மரணத்திற்கு இது மட்டுமே காரணம்- கடைசி புகைப்படத்தை பகிர்ந்து வதந்திக்கு முற்றுப்புள்ளி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் விவேக். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. காமெடி நடிகராக மட்டுமில்லாமல் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருடைய நடிப்புக்கும், நகைச்சுவை திறமைக்கும் என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

 நடிகர் விவேக் அவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டு இருந்தார்.பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசி குறித்து விழிப்புணர்வையும் சொல்லியிருந்தார். அதில் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளவேண்டாம், அனைவரும் தடுப்பூசி போடுங்கள் என்று விவேக் கூறியிருந்தார்.  தடுப்பூசி போட்ட அடுத்த நாளே திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் உயிரிழப்பிற்கு பல பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். 


நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணம் என்று சிலர் சோசியல் மீடியாவில் வதந்திகளைப் பரப்பினர். இதனிடையே விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்புசி தான் காரணம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணையம் நடிகர் விவேக்கின் மரணம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய சுகாதார ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்கள்.

அதன் அடிப்படையில் தேசிய தடுப்பூசி ஆய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.மேலும், விசாரணையில் நடிகர் விவேக் மரணத்திற்கும் தடுப்புசிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. நடிகர் விவேக்  இரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்று வல்லுநர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இதன் மூலம் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று பரவி வந்த வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.


 அதே போல விவேக்கின் மறைவு குறித்து பேசிய சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசிய போது விவேக் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மருத்துவமனையில் மட்டும் 800 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, அங்கு ஏராளமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரத்தக்குழாயில் ஒரே நாளில் அடைப்பு ஏற்படாது. இணை நோய் உள்ளவர்களும் நிச்சயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கும், விவேக்கின் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கும் நூறு சதவீதம் தொடர்பில்லை என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் சென்னையில் துவங்கப்பட்ட தமிழ் நாடு பத்திரிகையாளர்கள் புகைப்பட கண்காட்சியில் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது விவேக்கிற்கு தடுப்பூசி போட்ட போது எடுத்த புகைப்படத்தை நீண்ட நேரமாக உருக்கமுடன் பார்த்துக்கொண்டு இருந்தார். இதை தொடர்ந்து பேசிய ராதாகிருஷ்ணன் ‘இங்கே பல டச்சிங்கான புகைப்படங்கள் காண்பித்திருந்தார்கள் அதிலும் குறிப்பாக விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட போது எடுத்த புகைப்படத்தை பார்த்தபோது மிகவும் டச்சிங்காக இருந்தது’ என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement