மறைந்த நடிகை மனோரமாவின் வீடா இது..இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருக்கின்றனர். இவர்களில் திரைப்பட ஆரம்ப கால நடிகர்களில் இருந்து தற்பொழுது உள்ள முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வரை குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை வேடத்திலும் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை மனோரமா.

இவர் தமிழ்த் திரையுலகில் 1000 படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் புக்கில் இடம் பெற்று இருந்தார் என்பதும் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் 1963ஆம் ஆண்டு ரத்தத் திலகம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் சிவாஜிகணேசன் எம்ஜிஆர் உள்பட பல தலைமுறைகளையும் நடிகர்களுடன் நடித்து இருந்தார்.ஒரு காலகட்டத்தில் இவர் நடிக்காத படமே இல்லை என்ற அளவுக்கு அவருடைய படங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தன.

பழம்பெரும் நகைச்சுவை நடிகையான இவர் ஒரு சில படங்களில் அவர் நாயகியாகவும் நடித்து உள்ளார்.எஸ்.எம். ராமநாதன் அவர்கள் மனோரமாவை காதலித்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பூபதி என்ற மகன் இருக்கிறார்.

மனோரமா கணவனை பிரிந்ததிற்கு பிறகு மகனுடன் சென்னையில் சொந்த வீட்டில் வசித்து வந்தார்.இந்த நிலையில் புன்னகை நடிகை மனோரமா கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி தனது 78வது வயதில் காலமானார்.

இந்நிலையில் இவரின் வீட்டு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.இதோ அந்த புகைப்படம்..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்