• Apr 24 2024

வாரிசு படத்திற்காக விஜய் வாங்கியுள்ள சம்பளம்-இத்தனை கோடியா..வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.கடந்த ஏப்ரல் மாதம் நெல்சன் மற்றும் விஜய்யின் கூட்டணியில் உருவான பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.மேலும் அதுமட்டுமின்றி விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகினர்.

மேலும் குறிப்பாக நெல்சன் கடந்த இரண்டு மாதங்களாக ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றார். இருப்பினும் விமர்சனம் ரீதியாக இப்படம் தோல்வியை சந்தித்தாலும், வசூல் ரீதியாக இப்படம் வெற்றி படமாகவே அமைந்துள்ளது.

இந்நிலையில் விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு படத்தை மெகாஹிட்டாக கொடுக்கவேண்டுமென்ற முனைப்பில் இருக்கின்றார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை வெளியானது.அது ரசிகர்களிடத்தே வைரலானது.

வாரிசு எனும் டைட்டில் சில ரசிகர்களை ஈர்க்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். மாஸான டைட்டிலை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வாரிசு எனும் டைட்டில் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இருப்பினும் வாரிசு படத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.இதையடுத்து அடுத்தாண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்திற்காக விஜய் 120 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஏற்கனவே பீஸ்ட் படத்திற்காக விஜய்க்கு 100 கோடி சம்பளமாக பேசப்பட்டநிலையில் இப்படத்திற்கு விஜய் 120 சம்பளம் வாங்கியுள்ளாராம் என கூறப்படுகின்றது.

ஒருவேளை இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாவதால் தான் சம்பளம் அதிகமாகியுள்ளதாக பேசப்பட்டு வருவகின்றது என குறிப்பிடப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement