• May 02 2024

ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்த RK சுரேஷ்; இதுதான் காரணமா?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜய் சேதுபதி. திரைப்பட நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும், பாடலாசிரியராகவும் தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகர் ஆவார்.

இவருடைய எதார்த்தமான நடிப்பினால் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கும் இயல்பு கொண்டவராவார். அந்த வகையில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும், சிறப்பு தோற்றத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இந்நிலையில் ரஜினிக்கு வில்லனாக பேட்ட திரைப்படத்திலும், தளபதிக்கு வில்லனாக மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்துள்ள விஜய் சேதுபதி தொடர்ந்து கமலின் விக்ரம் படத்திலும் வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார். அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது..

தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் என்ற திரைப்படம் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை யுவன்சங்கர் ராஜா தயாரித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு முடிவடைந்தது.இடையில் சீனு ராமசாமிக்கும், யுவன் சங்கர் ராஜாக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாக சொல்லப்பட்டது, இதனால் பட ரிலீஸுக்கான கால அவகாசம் அதிகம் எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்கு விநியோக உரிமையை முன்னணி தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் வாங்கியுள்ளார். சில முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டது கடைசியாக நேற்று மாமனிதன் திரைப்பட ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

இந்நிலையில் படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, படத்தின் விநியோகஸ்தரான ஆர்.கே சுரேஷ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement