• Sep 21 2024

என்னை தல என்று அழைத்த முதல் நபர் இவர்தான் : அஜித்தே கூறிய தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் அஜித்.இவர் நடிப்பில் கடைசியாக வலிமை திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.

மேலும் வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின்னர் இரண்டாவது முறையாக இணைந்த வலிமை படம் சொதப்பியதால் தற்போது இவர்கள் கூட்டணியில் உருவாகும் AK61 படத்தை மிகவும் நம்பியுள்ளார் அஜித்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கியது.மேலும் அஜித் இப்படத்திற்காக தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகர் மகாநதி ஷங்கர் இணைந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

அஜித் இப்படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இப்படத்தில் நாயகியாக மஞ்சு வாரியார் நடிப்பதை இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிசெய்தார். எனினும் இதைதொடர்ந்து தற்போது இப்படத்தில் மகாநதி ஷங்கரும் இணைந்துள்ளார்.

அஜித்துடன் ஆரம்பகாலத்தில் பல படங்களில் நடித்துள்ளார் மகாநதி ஷங்கர். இந்நிலையில் மகாநதி ஷங்கரை அஜித் படப்பிடிப்பு தளத்தில் பார்த்தவுடன் பழைய நினைவுகளை அனைவரிடமும் பகிர்ந்துகொண்டாராம்.

எனினும் அப்போது அஜித் AK61 படக்குழுவிடம், என்னை முதன் முதலில் தல என்று அழைத்தது மகாநதி ஷங்கர் தான் என அஜித் நெகிழ்ச்சியாக கூறினாராம். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தில் தான் அஜித்தை முதன் முதலில் தல என்று அழைத்தார்கள். மேலும் அப்படத்தில் முதல் முதலில் மகாநதி ஷங்கர் தான் நீ ஆடு தல என்று அஜித்திடம் சொல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement