• Jan 19 2025

வைத்தியசாலைக்கு அவசர அவசரமாக அழைத்து செல்லப்பட்ட தீபிகா படுகோன்?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான ராம்லீலா படத்தில் இணைந்து நடித்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோனுக்கு இடையில் காதல் மலர்ந்தது. அதன் பின்பு இருவரும் காதலிக்க தொடங்கி 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணம் ஆகி கடந்த ஆறு ஆண்டுகள் குழந்தைகள் இல்லாமல் இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தீபிகா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.

திருமணத்திற்கு பிறகும் நடித்து வருகிறார் தீபிகா. கடந்த வருடம் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் சுமார் ஆயிரம் கோடி வரை வசூலை அள்ளியது. அதன் பின்பு கல்கி 28 98 திரைப்படத்தில் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.


சமீபத்தில் தீபிகா தனது கணவருடன் நிறைமாத வயிற்றுடன் இருக்கும் பிரக்னன்சி போட்டோ ஷூட்டிங் பதிவிட்டார். அதில் தன்னுடைய கணவர் ரன்வீர் சிங்கை கட்டிப்பிடித்து குழந்தையை வரவேற்க தயாராகி விட்டதாக தெரிவித்தார்.

அதன் பின்பு சித்தி விநாயகர் கோவிலுக்கு கணவருடன் தரிசனம் செய்திருந்தார். தீபிகாவிற்கு இந்த மாதம் 28 ஆம் தேதி குழந்தை பிறக்கும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது தீபிகா படுகோனை காரில் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி உள்ளன. இதன் மூலம் விரைவில் குட் நியூஸ் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement