• Oct 16 2024

தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி... குஷியில் விஜய் ரசிகர்கள்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டி அருகேயுள்ள வி சாலையில் 85 ஏக்கர் பரப்பளவில் வருகின்ற 23 ஆம் தேதி நடத்துவதற்கு விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் அனுமதி கோரி கடந்த 28 ஆம் தேதி மனு அளித்தனர்.


தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தை தவெக விஜய் தலைவர் மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை, தலைவர் விஜய் கடந்த 22ம் தேதி சென்னை, பனையூரில் அறிமுகம் செய்தார். இதையடுத்து, இந்த கட்சியின் முதல் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. 


திருச்சி, சேலம், தஞ்சாவூர், விக்கிரவாண்டி என பல இடங்களின் தேர்வு நடைபெறும் நிலையில், த.வெ.க., தலைமையில், பொதுமக்கள் அதிகமாக கூடுவதற்கான வசதியுள்ள இடமாகவும், தமிழகத்தின் மைய பகுதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக கொண்டு, ஆலோசனை செய்து வருகின்றனர்.


இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட தலைவர்கள் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏடிஎஸ்பி திருமாலிடம் நேரில் சந்தித்து மனு அளித்திருந்தார். தற்போது விக்கிரவாண்டி பகுதியில் 23ம் தேதி நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.  

Advertisement